தென்கொரியாவில் கொரோனா வைரஸ் அட்டகாசம் – 2000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பு

 

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் அட்டகாசம் – 2000க்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்பு

தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு 2000-த்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சியோல்: தென்கொரியாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. அங்கு 2000-த்திற்கும் மேற்பட்டோருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தற்போது பெருமளவு குறைய தொடங்கியுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 2788-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 78 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் கொரோனா வைரஸால் 44 பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

இந்த நிலையில், தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. அங்கு இதுவரை 13 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும் 2022 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 256 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவை தொடர்ந்து மற்ற நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது உலக மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கியுள்ளது.