தெகிடி ஹீரோவுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் நாயகி!

 

தெகிடி ஹீரோவுடன் ஜோடி சேரும் பிக் பாஸ் நாயகி!

பிரபல பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ஜனனி மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: பிரபல பிக் பாஸ் போட்டியாளரும், நடிகையுமான ஜனனி மீண்டும் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவன் இவன்,தெகிடி போன்ற திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஜனனி. அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான விதி மதி உல்டா திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. பின்பு படங்கள் வாய்ப்பு குறைவனைத்தையடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பங்குக்கேற்று தனக்கு என ஒரு ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். 

thegidi

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் ஜனனி தெகிடி படத்தின் ஹீரோ அசோக் செல்வனுடன் இணைந்து படம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை சந்தீப் ஷியாம் என்ற புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 4 வருடங்கள் கழித்து இருவரும் ஜோடி சேரும் இப்படம் திகில் கதையாக இருக்கும் என பேசப்பட்டுவருகிறது.