“தூரத்தில் நானிருந்தாலும் சென்னையை துரத்தும் கரோனா….” தமிழிசை சௌந்தரராஜனின் கவிதை!

 

“தூரத்தில் நானிருந்தாலும்  சென்னையை துரத்தும் கரோனா….”  தமிழிசை சௌந்தரராஜனின் கவிதை!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கிட்டத்தட்ட தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36 லட்சத்தை கடந்துள்ளது. நாடு முழுவதும் பொதுமுடக்கம்  மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.  அதன்படி மே 17 ஆம் தேதி வரை  ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு தளர்வுகள் அந்தந்த மாநிலங்களை பொறுத்து மாறுபடும் என்று  அறிவிக்கபட்டது.  

tt

அதே போல பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் தமிழக பாஜக முன்னாள் தலைவரும் தற்போதயை தெலுங்கானா முதல்வருமான தமிழிசை சௌந்தரராஜன் கொரோனா குறித்த விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.  அதில்,  

“தூரத்தில் நானிருந்தாலும்

சென்னையை துரத்தும் கரோனா

என்னைக் கவலையடையச் செய்கிறது…

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்

கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்…

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்

அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்…

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்

கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்…

 

தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது…
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு…
அடித்து விரட்டுவோம் கரோனாவை! – என
முடிவெடுங்கள் …முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை… pic.twitter.com/fi6PwNUcga

— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) May 5, 2020

 

ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால்

ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்…
முகக்கவசம் அணியுங்கள் என்றால்

மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்…
சமூக இடைவெளி வேண்டும் என்றால்

சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்…
கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்

கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது…அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு

அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?
எனவே…அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு…

அடித்து விரட்டுவோம் கரோனாவை! – எனமுடிவெடுங்கள் …

முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை…” என்று குறிப்பிட்டுள்ளார்.