தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக வேந்தாந்தா நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்தது.

இக்குழுவினர் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் சமீபத்தில் தாக்கல் செய்த ஆய்வறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடியது இயற்கை நீதிக்கு எதிரானது. ஸ்டெர்லைட் ஆலை செயல்பட அனுமதி தரலாம் என கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. 3 வாரத்தில் ஆலையை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பிறப்பித்துள்ள உத்தரவில் தேசிய பசுமை தீர்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, வெறும் அரசாணையை பிறப்பித்து விட்டு ஆலையை மூட முடியாது, இது வெறும் கண்துடைப்பு என தமிழக அரசு மீது பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை எழுப்பி வந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி பசுமை தீர்பாய உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.