தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை வளையத்திற்குள் சிக்கும் நடிகர் ரஜினிகாந்த்!?

 

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: விசாரணை வளையத்திற்குள் சிக்கும் நடிகர் ரஜினிகாந்த்!?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து  நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து  நடிகர் ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில்,கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.  இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தமிழக அரசு ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த குழுவானது 13 கட்டமாக விசாரணை நடத்தி சுமார்  366 விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. 

gun

இதையடுத்து 14 வது  கட்டமாக இந்த விசாரணை வளையத்திற்குள் 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.அதில் ’13 பேர் நேற்றுவரை ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இதுகுறித்து கூறியுள்ள இதுகுறித்து ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வக்கீல் அருள் வடிவேல் சேகர், இதுவரை ஆணையத்தில் 555 ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.இதையடுத்து போலீசில் காயம் அடைந்தவர்கள், வருவாய் துறையினர்  உள்ளிட்டவர்களிடம் விசாரணை நடத்தப்படும்’ என்றார். அப்போது நடிகர் ரஜினிகாந்தை விசாரணைக்கு அழைப்பீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்ட போது, தேவைப்பட்டால் இதுகுறித்து விவரம் அறிந்த அனைவரையும் விசாரணைக்கு அழைப்போம்’ என்று கூறினார். 

rajini

முன்னதாக தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து கருத்து  தெரிவித்த ரஜினி, போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். போலீசை மட்டும் குற்றம் கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவர்கள் தான். காவலர்களைத் தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உலகிற்கு காட்ட வேண்டும்.  ஒரு நபர் விசாரணையில் நம்பிக்கையில்லை’என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார்.