தூத்துக்குடியில் ரயில் சேவை நிறுத்தம் !

 

தூத்துக்குடியில் ரயில் சேவை நிறுத்தம் !

கன மழையின் காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில், தண்டவாளம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால், ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

நெல்லை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், கோவை, தஞ்சாவூர், தென்காசி, புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் நேற்று இரவு முதல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடிக் குடியிருப்பு பகுதிகளில் நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை பாதிப்பில் இருந்து மக்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

rain

கன மழையின் காரணமாகத் தூத்துக்குடி ரயில் நிலையத்தில், தண்டவாளம் முழுவதுமாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால், ரயில்களை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக ரயில் சேவை பாதிக்கக் கூடாது என்பதற்காக  பள்ளம் தோண்டப்பட்டு அதில் மழை நீர் தண்டவாளத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தூத்துக்குடி ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தண்டவாளத்தில் இருந்து நீரை அகற்றி ரயில் சேவையை மீண்டும் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது.