தூத்துக்குடியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

 

தூத்துக்குடியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் பொதுமக்கள் போராடிய போது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பரிதாபமாக பலியானார்கள்.  இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணை பிறப்பித்ததால் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு காற்று மாசு குறைந்துள்ளது என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றின் தரம் தொடர்பான தரவு பட்டியலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தூத்துக்குடியில் காற்றின் தரம் பற்றி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அளித்திருக்கும்  தரவு பட்டியலில் காற்றில் சல்பர் டை ஆக்சைடு வெகுவாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.