தூக்கில் ஏற்றி மூன்று நாள் தொங்கவிடவேண்டும் .. பாகிஸ்தான் கோர்ட்டுக்கு ஏன் இந்த கொலை வெறி!

தூக்கில் ஏற்றி மூன்று நாள் தொங்கவிடவேண்டும் .. பாகிஸ்தான் கோர்ட்டுக்கு ஏன் இந்த கொலை வெறி!

பாகிஸ்தானில் அவசரநிலையை அமல் படுத்திய குற்றத்துக்காக முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு தூக்குத்தண்டனை விதித்து இருக்கிறது பெஷாவர் நீதிமன்றம். அதை எதிர்த்து தனது அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து இருக்கிறது பாகிஸ்தான் ராணுவம்.அங்கங்கே சிறு சிறு ஊர்வலங்களும் இந்தத் தீர்ப்பைக் கண்டித்து நடக்கின்றன. 

இது குறித்து பேசிய முஷாரப்,’தனக்கோ தனது வழக்குரைஞர்களுக்கோ என் தரப்பை முன் வைக்க வாய்ப்பே தராமல் இந்த வழக்கு விசாரணை நடந்திருக்கிறது. என் மீது வெறுப்புக் கொண்ட பலர் இப்போது அரசில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார்கள். அதைத் தவராகப் பயன்படுத்தி இருக்கிறார்கள்’ என்று சொல்லி இருக்கிறார்.

musraff

முஷாரப் சொல்வது சரியாக இருக்குமோ என்று என்ன வைக்கிறது கோர்ட் தீர்ப்பில் அவருக்கு மரணதண்டனையை எப்படி வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கும் விதம்.’தேசத்துரோக குற்றவாளி முஷாரப் எங்கிருந்தாலும், அவரை கைது செய்து கொண்டுவந்து மரண தண்டனையை நிறை வேற்ற வேண்டும்.அவர் சாகும் வரை அவர் தூக்கிலிடப்பட வேண்டும்.’ இதுவரை சொல்லப்பட்டு உள்ளவை எல்லா மரணதண்டனை தீர்ப்பிலும் சொல்லப் படுபவைதான்.ஆனால் அடுத்து வரும் வரிகளைப் பாருங்கள்.’ ஒரு வேளை உயிரிழந்த நிலையில் முசாரப் கண்டுபிடிக்கப் பட்டால் ,அவரது உடலை இஸ்லாமாபாத்தில் இருக்கும் டி.சவுக் பகுதிக்கு இழுத்துக் கொண்டு வந்து மூன்று நாட்களுக்குத் தொங்கவிட வேண்டும்’ என்கிறது தீர்ப்பு!.

mushraff

தீர்ப்பை வழங்கிய மூன்று நீதிபதிகளில் கரீம் என்பவருக்கு மட்டும் இதில் உடன்பாடில்லை.’இப்படிக் கொடூரமான முறையில் தீர்ப்பளிக்கச் சட்டத்தில் இடமில்லை,குற்றவாளிக்கு மரணதண்டனை மட்டுமே போதுமானது ‘ என்று நீதிபதி கரீம் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.