தூக்கியடிக்கப்படும் பன்வாரிலால் புரோஹித்… தமிழக புதிய ஆளுநராக அருண் ஜேட்லி நியமனம்..!

 

தூக்கியடிக்கப்படும் பன்வாரிலால் புரோஹித்… தமிழக புதிய ஆளுநராக அருண் ஜேட்லி நியமனம்..!

அருண் ஜேட்லிக்கு உள்ள நற்பெயரோடு, தமிழகத்துக்கு ஆளுநராக்கி சென்னையில் உள்ள மருத்துவ வசதிகள் மூலம் அவர் நலமாகக் கூடும் என்கிற அக்கறையும் இதில் அடங்கியுள்ளது.

தமிழகத்தில் தாமரையை மலர வைக்க துடியாய் துடிக்கிறது பாஜக. மக்களவை தேர்தலில் தர்ம அடி வாங்கியதை அமித் ஷாவால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. கருப்பு பலூன் விட்டு கோபேக் மோடி என்கிற கோஷம் அடுத்து காவி கலரடித்து கம் பேக் மோடி என சொல்லவைக்க வேண்டும் என்பதே பாஜகவின் அதிரடி அஜெண்டா. அதன் படி அதிமுக ஆட்சியை நீடிக்க வைத்து தமிழகத்தில் ’இலை’ மூலம் தாமரையை துளிர்க்க வைக்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது. ops

அதற்கு முதல் படியாக பாஜக வெறுப்பு கோஷத்தை நீக்க வேண்டும் என கருதுகிறார் அமித் ஷா. அதற்காகவே இந்தி திணிப்பை புகுத்தி பல்ஸ் பார்த்து உடனடியாக வாபஸ்  பெறுகிறார்கள். பள்ளியிலும், ரயில்வே துறையிலும் நடந்த இந்தி விவகாரமே இதற்கு சாட்சி. அந்த வகையில் அடுத்த கட்டமாக தமிழகத்தில் பேராசியை நிர்மலா தேவி விவகாரம் ஆளுநர் பன்வாரிலாலை படுத்தி எடுத்து விட்டது. அத்தோடு திடீர் ஆய்வுக்கு அவர் அவ்வப்போது கிளம்பியதை எதிர்கட்சிகள் பலூனாக ஊதி பெரிதுபடுத்தி விட்டன. prohit

ஆகையால் பன்வாரிலால் புரோஹித்தை மாற்றி விட்டு, மத்தியில் அமைச்சர் பதவியை உடல் நலக் குறைவால் விட்டுக் கொடுத்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியை தமிழக ஆளுநராக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. அருண் ஜேட்லிக்கு உள்ள நற்பெயரோடு, தமிழகத்துக்கு ஆளுநராக்கி சென்னையில் உள்ள மருத்துவ வசதிகள் மூலம் அவர் நலமாகக் கூடும் என்கிற அக்கறையும் இதில் அடங்கியுள்ளது. ops

ஆக மொத்தத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்வதாகக் கருதப்பட்ட தமிழகத்தில் ஆளுநர் மாற்றத்தை நிகழ்த்தி காட்ட உள்ளது மோடி தலைமையிலான பாஜக ஆட்சி..!