தூக்கமாத்திரை சாப்பிட்ட பெண் எம்பி?! நார்மல் வார்டுக்கு மாற்றம்!

 

தூக்கமாத்திரை சாப்பிட்ட பெண் எம்பி?! நார்மல் வார்டுக்கு மாற்றம்!

தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக செய்திகள் பரவின. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நார்மல்  வார்டுக்கு மாற்றப்பட்டார்.

பிரபல வங்காள நடிகை நுஸ்ரத் ஜஹான். முன்னணி நடிகைகளுள்  ஒருவராக வலம்வந்த இவர் மக்களவைத் தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஷிர்ஹட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  இதையடுத்து நுஸ்ரத் ஜஹான் நீண்ட நாள் காதலரான பிரபல தொழிலதிபர்  நிகில் ஜெயினை துருக்கியில் உள்ள போட்ரம் என்ற இடத்தில்  கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார். 

Nusrat Jahan

இந்நிலையில் நுஸ்ரத் ஜஹான் கணவர் ஜெயினுக்கு கடந்த 17 ஆம் தேதி  பிறந்த நாள். அதைக் கொண்டாடிய நுஷ்ரத் திடீரென்று  கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக செய்திகள் பரவின. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று நார்மல்  வார்டுக்கு மாற்றப்பட்டார்.

Nusrat Jahan

இதுகுறித்து கூறியுள்ள அவரது குடும்பத்தினர், ‘நுஸ்ரத் ஜஹான் தற்போது நலமாக உள்ளார். அவருக்கு ஆஸ்துமா பிரச்னை உள்ளது. இதனால் அவருக்கு திடீரென்று  சுவாச பிரச்னை ஏற்பட்டது. அதனால் தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டதாக வரும் தகவல்கள் அனைத்தும் பொய்யானது’ என்றனர்.