துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் விசிட்; ஜோதிடர்களின் அறிவுறுத்தல்?

 

துர்கா ஸ்டாலின் காசிக்கு திடீர் விசிட்; ஜோதிடர்களின் அறிவுறுத்தல்?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது தாய் வீட்டு குடும்பத்தினருடன் காசிக்கு திடீரென விசிட் அடித்துள்ளார்.

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், தனது தாய் வீட்டு குடும்பத்தினருடன் காசிக்கு திடீரென விசிட் அடித்துள்ளார். 

திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதியும் சரி, இந்நாள் தலைவர் ஸ்டாலினும் சரி, இருவருமே திராவிட கொள்கைகளை கடைபிடித்து வந்தாலும், தங்கள் குடும்பத்தினரிடையே அதை வற்புறுத்தியது கிடையாது. பெரியாரின் திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து, அரசியல் கட்சியாக திராவிட முன்னேற்ற கழகத்தை அண்ணா தொடங்கியபோது, ‘ஒன்றே குளம்; ஒருவனே தேவன்’ என்ற புதிய முழக்கத்தை முன் வைத்தார். அதாவது நேரடியாக கடவுள் மறுப்பை முன்வைத்தால், அனைவரையும் உள்ளடக்கிய வாக்கரசியலில் வெற்றி பெற முடியாது என்பதால், கடவுள் மறுப்பு பிரசாரத்தை திமுக முன்னெடுக்காது என்பதே அதன் பொருளாக அறியப்பட்டது. 

ஆனால், பெண்களுக்கும் சொத்தில் சம உரிமை, பெண்களுக்கான இடஒதிக்கீடு, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம் போன்ற பெரியாரின் கொள்கைகளுக்கு திமுக சட்ட வடிவம் கொடுத்திருக்கிறது.

இருப்பினும், அவ்வப்போது திமுக தலைவர்களின் குடும்பத்தினர் இந்து மதம் சார்ந்த சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், திமுக தலைவர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் தற்போதைய காசி விசிட், சமூகவலைதளங்களில் மீண்டும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. 

durga stalin

தனது சகோதரர் டாக்டர் ராஜமூர்த்தி, அக்கா பார்வதி உள்ளிட்ட தன் தாய் வீட்டு குடும்பத்தினருடன் துர்கா ஸ்டாலின் காசிக்கு சென்றுள்ளார். கடந்த காலங்களில் கோயில், யாகம், பூஜை, புனஸ்காரம் என அனைத்து குடும்ப பெண்களை போலவே கடவுள் பக்தி நிரம்பியவராக தன்னை துர்கா ஸ்டாலின் அடையாளப்படுத்திக் கொண்டிருப்பதால், இதில் ஆச்சரியப் பட என்ன இருக்கின்றது என்கின்றனர் விவரமறிந்தவர்கள். 

இது ஒரு புறம் இருக்க, தனது ஆஸ்தான ஜோதிடரின் அறிவுரைப்படியே, மோடியின் தொகுதியான காசிக்கு துர்கா ஸ்டாலின் விசிட் அடித்திருப்பதாக மற்றொரு தகவலும் வலம் வருகிறது. எது எப்படியோ, “எங்க தலைவர் ஸ்டாலின் முதல்வர் ஆனால் போதும்” என கூறிவிட்டு நடையைக் கட்டுகின்றனர் திமுக உடன்பிறப்புகள்!