துப்புரவுத் தொழிலாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார் – முதலமைச்சர் 

 

துப்புரவுத் தொழிலாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைக்கப்படுவார் – முதலமைச்சர் 

கடந்த 9ம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கடந்த 9ம் தேதி முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துப்புரவுத் தொழிலாளர்கள் இனி “தூய்மைப் பணியாளர்கள்” என்று அழைக்கப்படுவர் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

 

 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, “மக்கள் நலன், பொது சுகாதாரத்தை பேணும் வகையில் பணியாற்றிடும் துப்புரவு பணியாளர்களின் செயல்பாடுகளை கௌரவிக்கும் வகையிலும், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடவும் அனைத்து துப்புரவு பணியாளர்களும் இனி “தூய்மை பணியாளர்கள்” என அழைக்கப்படுவர்” என பதிவிட்டுள்ளார்.