துப்பாக்கியைக்காட்டி மிரட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

 

துப்பாக்கியைக்காட்டி மிரட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

துப்பாக்கியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என்று மனைவியை மிரட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு அளிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

துப்பாக்கியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என்று மனைவியை மிரட்டிய தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு அளிக்கப்பட்ட மூன்று ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
திருவாரூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் அசோகன். அதன்பிறகு கருத்து வேறுபாடு காரணமாக அ.தி.மு.க சென்றார். அங்கு அவருக்கு டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவி அளிக்கப்பட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க-வுக்கு திரும்பிவிட்டதாக கூறப்படுகிறது. 
கடந்த 2015ம் ஆண்டு சென்னை நகரத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பாதிப்பு நேரத்தில் அசோகனின் இரண்டாவது மனைவி ஹேமா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, பிஸ்கட் உள்ளிட்டவற்றை அளிக்கச் சென்றார். வர நேரம் ஆகிவிட்டது. இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்த அசோகன் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால், ஹேமா தன்னுடைய தாயாரை அழைத்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். மேலும், பட்டினப்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.





இந்த வழக்கு எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மீது தாக்கல் ஆகும் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. கடந்த நவம்பர் மாதம் அந்த வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ அசோகனுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். 
இதை எதிர்த்து அசோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், மேல் விசாரணை முடியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். இதை விசாரித்த நீதிபதி ஆதிகேசவலு, சிறப்பு நீதிமன்றம் விதித்த மூன்று ஆண்டு தண்டனையை நிறுத்திவைத்தார். மேலும் வழக்கு விசாரணையை எட்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.