துப்பாக்கியால் சுட வேண்டும் என்று அமைச்சர் பேசுவாராம்… தூக்கிட்டு வந்து அடிக்க வேண்டாமான்னு ஸ்டாலின் பேசக்கூடாதாம்! எச்.ராஜாவின் ஆதங்கம்

துப்பாக்கியால் சுட வேண்டும் என்று அமைச்சர் பேசுவாராம்… தூக்கிட்டு வந்து அடிக்க வேண்டாமான்னு ஸ்டாலின் பேசக்கூடாதாம்! எச்.ராஜாவின் ஆதங்கம்

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்ட ரவுடி மாதிரி பேசுகிறார் என்று எச்.ராஜா கூறியதற்கு தி.மு.க தரப்பில் கண்டனங்கள் எழுந்துள்ளன.
தேனி மாவட்டத்துக்கு வந்த பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்ய வேண்டும். தமிழக அரசுக்கு மத்திய அரசு விருது வழங்கியது. விருது வழங்கியவனை தூக்கிவந்து அடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

stalion

ஒரு பேட்டை ரவுடியைப் போல தி.மு.க தலைவர் ஸ்டாலின் செயல்படுவது துரதிருஷ்டவசமானது. தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வேண்டும் என்று போராடுபவர்கள் எல்லாம் நாத்திகர், நக்சல்கள், ஜிகாதிகள் போன்றவர்கள்தான். இவர்கள் எல்லாம் தமிழ் பற்றாளர்கள் இல்லை. கும்பாபிஷேகத்துக்கு எதிராக போராடுபவர்கள் எல்லாம் இந்து விரோதிகள்” என்றார்.

raja

எச்.ராஜா பேச்சை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. வாயில் வந்தபடி எல்லோரையும் ஆன்டி இந்தியன், டெரரிஸ்ட் என்று வழக்கம்போல பேசிக்கொண்டு இருக்கிறார். ஆனால், மு.க.ஸ்டாலினை பேட்டை ரவுடி என்று விமர்சனம் செய்திருப்பதை தி.மு.க-வினர் எதிர்த்து வருகின்றனர்.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் எதிர்ப்பவர்கள் எல்லோரையும் சுட்டுக்கொல்வோம் என்று அமைச்சர் பேசலாம், மசூதிகள் இடிக்கப்படும், இஸ்லாமியர்கள் காலி செய்யப்படுவார்கள் என்று பா.ஜ.க எம்.பி பேசலாம். ஆனால், ஸ்டாலின் மட்டும் ராஜா ஆசைப்படி பேச வேண்டுமா என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.