துபாய், சவுதி அரேபியா நாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை மிஸ்ஸிங்!

 

துபாய், சவுதி அரேபியா நாடுகளில் இருந்து திரும்பியவர்களுக்கு கொரோனா சோதனை மிஸ்ஸிங்!

துபாய், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கொரோனா சோதனை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

டெல்லி: துபாய், சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா திரும்பியவர்களை கொரோனா சோதனை செய்யவில்லை என்று தெரியவந்துள்ளது.

இந்தியாவில் மார்ச் 8-ஆம் தேதிக்கு பிறகு தான் பலத்த கொரோனா சோதனைகள் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாத தொடக்கத்தில் துபாய், சவுதி அரேபியா போன்ற வளைகுடா நாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் பலருக்கு கொரோனா சோதனை செய்யாமலே அனுமதிக்கப்பட்டனர். அவர்களும் எளிதாக வீட்டுக்கு சென்று விட்டனர். மேலும் அவர்கள் வீட்டுக்கு சென்றபின்பு தனிமையில் இருக்கவும் அறிவுறுத்தப்படவில்லை.

corona test

வளைகுடா நாடுகளில் இருந்து நாடு திரும்பிய பயணிகளை கொரோனா சோதனை இடுவதற்கான உத்தரவுகள் மார்ச் இரண்டாவது வாரம் வரை பிறப்பிக்கப்படவில்லை. இதனால் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படாத வளைகுடா பயணிகளால் இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.