துண்டுதுண்டாக கிடந்த பெண்: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்று வீசிய கொடூரம்: பின்னணி என்ன?

 

துண்டுதுண்டாக கிடந்த பெண்: நடத்தையில் சந்தேகப்பட்டு கணவனே கொன்று வீசிய கொடூரம்: பின்னணி என்ன?

பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் தொடர்புடைய வழக்கில்,நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சென்னை: பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கை, கால்கள் தொடர்புடைய வழக்கில்,நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் கணவனே கொலை செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கில் கண்டெடுக்கப்பட்ட கை, கால்கள் தொடர்புடைய வழக்கில் கொல்லப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக, கொல்லப்பட்ட பெண்ணின் கணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

murder

கொலை செய்யப்பட்ட பெண் தூத்துக்குடியைச் சேர்ந்த சந்தியா என்பதும், திருமணமான இவர், கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.  இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பாலகிருஷ்ணன், கடந்த 2010ஆம் ஆண்டு காதல் இலவசம் என்ற படத்தை இயக்கியுள்ளார். மேலும் மனைவி சந்தியா பெயரிலேயே தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அந்த படத்தை பாலகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த படம் ஓடாத காரணத்தினால் வாய்ப்புகள் இல்லாமல், நண்பர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி வந்துள்ளார். சந்தியா அவரது தாய் வீட்டில் வசித்து வர, பாலகிருஷ்ணன் மட்டும் ஜாபர்கான்பேட்டையில் உள்ள காந்தி தெருவில் வசித்து வந்துள்ளார். 

santhiya

இந்நிலையில் சந்தியாவுக்கு வேறு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனால் மனைவியை சமாதானம் பேச முயற்சிப்பது போல வரவழைத்த பாலகிருஷ்ணன் ஜாபர்கான்பேட்டையில் உள்ள வீட்டில் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, சினிமா இயக்குநர் பாலகிருஷ்ணனை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், பள்ளிக்கரணை குப்பைக் கிடங்கிலேயே சந்தியாவின் மற்றொரு உடல் பாகத்தை கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், சந்தியாவின் தலை கிடைக்காததால், அதை தொடர்ந்து தேடி வரும் போலீசார், ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள அடையாற்றின் கரையோரத்திலும் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.