துணை வேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல்! ஆளுநர் அதிர்ச்சித் தகவல்

 

துணை வேந்தர்கள் நியமனத்தில் பல கோடி ஊழல்! ஆளுநர் அதிர்ச்சித் தகவல்

தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டதில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உயர்கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர், “தமிழகத்தில் துணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டதைப் பார்த்து என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் வருத்தமடைந்தேன், அந்த நிலையை மாற்றவும் நினைத்தேன். 

அதன்பின் முறையான தகுதி அடிப்படையில் தான் துணை வேந்தர் நியமனம் நடைபெற வேண்டும் என முடிவு செய்து, இதுவரை 9 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்துள்ளேன்.

துணை  வேந்தர் நியமனத்தில் யாரெல்லாம் விண்ணப்பித்துள்ளனர், எதன் அடிப்படையில் அவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது வெளிப்படையாக இருக்க வேண்டும். ஒரு நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், சிறந்த ஒருவரை தான் தலைவராக தேர்ந்தெடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

ஆளுநரின் இந்த பேச்சு உயர்க்கல்வித் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.