துணை முதல்வர் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பணி நியமனம் ரத்து !

 

துணை முதல்வர் ஓ.பி.எஸ் சகோதரர் ஓ.ராஜாவின் பணி நியமனம் ரத்து !

மதுரை ஒருங்கிணைந்த ஆவின் கூட்டுறவுச் சங்கத் தலைவராகக் கடந்த ஆண்டு ஓ.ராஜா நியமிக்கப்பட்டார்.

மதுரை ஒருங்கிணைந்த ஆவின் கூட்டுறவுச் சங்கத் தலைவராகக் கடந்த ஆண்டு ஓ.ராஜா நியமிக்கப்பட்டார். இவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர். ஓ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதுமட்டுமில்லாமல், தேனி மாவட்டம் பி.சி பட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் போலி ஆவணங்களைக் கொண்டும் எந்த ஒரு முன் அறிவிப்பு இல்லாமலும் ஓ.ராஜா ஆவின் கூட்டுறவுச் சங்கத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் என்று உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குப் பதிவு செய்தார். 

ttn

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  தேனி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச்  சங்கத் தலைவராக ஓ.ராஜா பணியாற்ற இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், ஓ.ராஜா தலைமையிலான 17 பேர் கொண்ட குழுவும் செயல்பட இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில், விதிப்படி ஓ.ராஜா மற்றும் அவரது குழுவினர் தேர்ந்தெடுக்கப் படாததால் அவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், ஆவின் ஆணையர் பதவி விதிகளின் படி தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ குழு அமைக்க முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.