துணைவேந்தர் நியமன ஊழல்: முதல்வர், துணை முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

 

துணைவேந்தர் நியமன ஊழல்: முதல்வர், துணை முதல்வரை பதவி நீக்கம் செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

‘துணை வேந்தர்கள் நியமன ஊழல்’ விவகாரத்தில் அதிகாரம் இருந்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: ‘துணை வேந்தர்கள் நியமன ஊழல்’ விவகாரத்தில் அதிகாரம் இருந்தும் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது ஏன் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

உயர் கல்வி மேம்பாடு குறித்த கருத்தரங்கு சென்னை தியாகராயநாகரில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித், தமிழகத்தில் துணைவேந்தர் பதவிக்குப் பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டது தனக்கு தெரிய வந்ததது,  அதை மாற்றி தகுதி அடிப்படையில் 9 துணைவேந்தர்களை நான் நியமித்தேன். இதிலிருந்து ஆரம்பப்பள்ளி ஆசிரியர் முதல் துணை வேந்தர் வரை தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று கூறினார். ஆளுநரின் இந்தக் கருத்துக்கு விளக்கம் அளித்துள்ள தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், துணை வேந்தர் நியமனத்தில், உயர் கல்வித்துறைக்கு தொடர்பில்லை என்று விளக்கமளித்தார்.

 

இந்நிலையில் இது குறித்து  அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் ஊழல் குறித்து பொது மேடைகளில் பேசுவது எவ்வித பலனையும் தராது. அதிமுக அரசின் ஊழல்களை அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆளுநர் “துணை வேந்தர்கள் நியமன ஊழல்” பற்றி மட்டும் குறிப்பாக தேர்ந்தெடுத்துப் பேசுவது ஆச்சர்யமாக இருக்கிறது. ஊழலைத் தடுப்பதில் ஆளுநருக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், முதலமைச்சர் பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அன்பழகன், விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி ஆகியோரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.