தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவரின் தங்கையின் கால்களை தாங்கிப்பிடித்த ராணுவ வீரர்கள்!!

 

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவரின் தங்கையின் கால்களை தாங்கிப்பிடித்த ராணுவ வீரர்கள்!!

நிரலா தான் வீட்டில் ஒரே மகன், அவருக்கு நான்கு அக்கா, தங்கைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அவரின் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் உள்ளதால், நிரலாவின் தங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளனர்.

இந்தியாவில் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு உயிர் நீத்த ராணுவ வீரரின் தங்கையின் திருமணத்தை மற்ற ராணுவப்படையினர் சேர்ந்து நடத்தி வைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஷிமீரில் நடந்த தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு, 6-வது தீவிரவாதியிடம் நடந்த சண்டையில் ராணுவப்படை வீரர் நிரலா கொல்லப்பட்டார். நிரலா தான் வீட்டில் ஒரே மகன், அவருக்கு நான்கு அக்கா, தங்கைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அவரின் குடும்பத்தினர் மிகவும் வறுமையில் உள்ளதால், நிரலாவின் தங்கையின் திருமணத்தை நடத்துவதற்கு கஷ்டப்பட்டு வந்துள்ளனர். இதையறிந்த நிரலாவுடன் பணியாற்றிய சக ராணுவ வீரர்கள், அவருக்கு திருமணம் நடத்தி வைக்க வேண்டும் என்பதற்காக ஆள் ஒன்றிற்கு 500 ரூபாய் நிதி திரட்டியுள்ளனர். இதன் மூலம் 5 லட்சம் ரூபாய் சேர்ந்துள்ளது. இந்த பணத்தை வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர்.

நிரலாவின் தங்கை மணமகள் கோலத்தில் இருந்து வீட்டில் இருந்து வெளியில் வரும் போது, வெளியில் இருந்த அதிரடிப்படையினர்  தங்களுடைய கைகளை கீழே வைத்து அவர் பாதத்தை அதில் வைக்கும் படி கூறியுள்ளனர். சாஸ்திரங்களுக்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்வு குறித்த  புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.