தீவிரவாதிகளுடன் ராகுல் காந்திக்கு தொடர்பு: சமூக வலைதளங்களில் வைரலான வதந்தி?

 

தீவிரவாதிகளுடன் ராகுல் காந்திக்கு தொடர்பு: சமூக வலைதளங்களில் வைரலான வதந்தி?

சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியாய் கருதப்படும் அடில் அஹமத் டர் உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

புதுதில்லி: சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியாய் கருதப்படும் அடில் அஹமத் டர் உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள வேளையில், அரசியல் ஆதாயத்துக்காக போலி செய்திகளை பரப்பி வருகிறது ஒரு கும்பல். சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் முக்கிய குற்றவாளியாய் கருதப்படும் அடில் அஹமத் டர் உடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இது போலி புகைப்படம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் நம் இந்திய வீரர்களை தாக்கியவன். காங்கிரஸ் கட்சி இந்த தாக்குதலுக்கு பின் செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளதா? என தலைப்பிடப்பட்டு இந்த புகைப்படம் பகிரப்பட்டது. பிரதமர் மோடியின் டிவிட்டர் கணக்கில் கூட இந்த புகைப்படத்தை கமெண்ட் செய்திருந்தனர்.

ghfh

இந்நிலையில் இந்த புகைப்படம் 2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராகுல் இஸ்லாமியர்களின் விழாவில் கலந்துகொண்ட சமயம் எடுக்கப்பட்டது என தகவல் கிடைத்திருக்கிறது.. அருகில் இருந்த நபரின் முகத்தை மார்பிங் செய்து தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர் முகத்தை பொருத்தியுள்ளனர்.

szd

சிஆர்பிஎப் வீரர்களின் மரணத்தை கூட அரசியலாக்க பார்க்கிறார்கள் என சமூக வலைதளங்களில் இதற்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.