தீர்ப்பு சாதகமா? பாதகமா? என்பதெல்லாம் அவர்கள் பிரச்னை: மு.க.ஸ்டாலின்

 

தீர்ப்பு சாதகமா? பாதகமா? என்பதெல்லாம் அவர்கள் பிரச்னை: மு.க.ஸ்டாலின்

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அதிமுகவின் இரண்டு அணிகளுக்கு சாதமா? பாதகமா? என்பது அவர்கள் பிரச்னை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அதிமுகவின் இரண்டு அணிகளுக்கு சாதமா? பாதகமா? என்பது அவர்கள் பிரச்னை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் உடனடியாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு அதிமுகவின் 2 அணிகளுக்கு சாதகமா? பாதகமா? என்பதெல்லாம் அவர்களது பிரச்னை. எந்த நேரத்தில் தேர்தல் நடந்தாலும் மக்களை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது என்றார்.