தீராத நோய்களைத் தீர்க்கும் திருசெந்தூர் பன்னீர் இலை பிரசாதம்

 

தீராத நோய்களைத் தீர்க்கும் திருசெந்தூர் பன்னீர் இலை பிரசாதம்

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம் என்று ஒவ்வொரு ஆலயங்களிலும் தருகிற பிரசாதங்கள் பிரசித்தி பெற்றவை. அதே மாதிரி, திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பன்னீர் இலையில் வைத்து தரப்படுகிற விபூதி தான். 

திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம் என்று ஒவ்வொரு ஆலயங்களிலும் தருகிற பிரசாதங்கள் பிரசித்தி பெற்றவை. அதே மாதிரி, திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பன்னீர் இலையில் வைத்து தரப்படுகிற விபூதி தான். 

temple

எல்லா கோயில்களிலும் தான் விபூதியைத் தருகிறார்கள். இதிலென்ன விசேஷம் என்றால், பன்னீர் இலையில் வைத்துத் தருவதில் தான் சிறப்பு இருக்கிறது. 
இன்றும் இந்த இலை விபூதி பிரசாதம் தீராத பல நோய்களை தீர்க்கும் அருமருந்தாக விளங்கி வருகிறது.திருசெந்தூர் செல்பவர்கள் முருகனைத் தரிசித்து, இந்த இலைவிபூதி பிரசாதத்தைத் தவறராமல் பெற்றுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

முருகனின் ஒரு பக்க கரத்திற்கு ஆறு கரங்கள் என இருபக்கங்களிலும் சேர்த்து பன்னிரு கரங்கள். அது மாதிரியே பன்னீர் மரத்தின் இலைகளிலும் ஒரு பக்கத்திற்கு ஆறு நரம்புகள் என பன்னிரு நரம்புகள் இருக்கும். பன்னிரு கரத்தானான முருகனைச் சென்று தரிசித்து, வணங்குகிற பக்தர்களுக்கு அவன் தனது பன்னிரு திருக்கரங்களினாலேயே இந்த விபூதி பிரசாதத்தைத் தருவதாக ஐதீகம். 

temple

அப்படி வழங்கப்படுகின்ற திருநீற்றை பத்திரமாக பன்னீர் இலைகளில் சேமித்து வைப்பது, செல்வத்தை சேமிப்பதைப் போல. அதனால் இந்த விபூதியை பன்னீர் செல்வம் என்று பக்தர்கள் வாங்கிச் செல்கிறார்கள். 

பன்னீர் மரத்தின் இலைகளில் சாந்த குணசக்தி நிறைவாக உள்ளது. அது நமது உடலுக்கு நன்மைகளைத் தருகிறது என்கிறது சித்தவைத்தியம். பன்னீர் இலை விபூதியைப் பக்தர்கள் இல்லங்களுக்கு எடுத்துச் சென்று, பூஜை அறைகளில் பத்திரப்படுத்தி வியாதிகள் வந்தால் செந்தில் முருகனை வேண்டி  அணிந்து கொள்கிறார்கள். பக்தர்கள் பன்னீர் இலை விபூதியுடன் இலையையும் உண்டு நோய்களிலிருந்து குணமடைகிறார்கள். 

temple

ஆதி சங்கரருடன் ஏற்பட்ட வாதங்களில் தோற்ற அபிநவகுப்தர், அபிசார வேள்வி செய்து சங்கரருக்கு உடலை வருத்தும் நோய் உண்டாகச் செய்து விட்டார். வட கர்நாடகாவிலுள்ள கோகர்ணத் திருத்தலத்தில் தங்கி வழிபாடு செய்து வந்த சங்கரரின் கனவில் இறைவன் தோன்றி, “என் குமாரன் ஷண்முகன்குடியிருக்கும்  புண்ணியத் தலமான திருச்செந்தூருக்குச் சென்று தரிசித்தால் உன் நோய் முற்றிலுமாக நீங்கப் பெறுவாய்” என்று கூறினார். 

கோகர்ணேஸ்வரர் ஆணைப்படி, திருசெந்தூர் வந்தடைந்த, ஆதிசங்கரர், இறைவன் சன்னதியில் மனமுருகி நின்றபோது, அவருக்கு இறை தரிசனம் கிட்டியது. இலை விபூதியைப் அணிந்து கொண்ட சங்கரருக்கு வெகு விரைவில் நோய் குணமாயிற்று அதன் பின்னர் ஆதிசங்கரர் திருச்செந்தூர் சுப்பிரமணியனின் மேல் மனமுறுகி சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகம் பாடினார். அதில் 25வது பாடலில் இலை விபூதியின் மகிமை பற்றி

“அபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு
ஜ்வரோன்மாத குல்மாதிரோஹான் மஹாந்த
பிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்
விலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே” என்று பாடியிருக்கிறார்.

இதன் பொருள், “சுப்பிரமண்யா! உன்னுடைய இலை விபூதிகளைக் கண்டாலே கால் கை வலிப்பு, காசம், கயம், குட்டம் முதலிய எல்லா நோய்களும் நீங்கிவிடும். எந்த விதமான செய்வினைகள், பூதம், பிசாசு, தீவினை யாவும் விட்டு விலகிவிடும்” என்பதாகும். 

தாடகையை ராமன் மூலமாக வதம் செய்ததினால், தனக்கு ஏற்பட்ட குன்ம நோய் தீர, செந்திலாண்டவனின் இலை விபூதியைத் தரித்துக் கொண்டு நோய்கள் நீங்கப் பெற்றார் விஸ்வாமித்திரர்.

lord muruga

தீவினைகளுக்கு மட்டுமல்லாமல், தோல் நோய்கள், புற்றுநோய் என தீராத பல நோய்களுக்கு வரம் தரும் பிரசாதமாக இருக்கிறது இந்த பன்னீர் இலை விபூதி.  முருனைப் பூஜித்த தேவர்கள் அனைவரும் இந்த பன்னீர் மரங்களாக இருப்பதாகவும், அதில் இருந்து பெறப்படும் பன்னீர் இலைகள் பிரசாதமாக வழங்கப்படுவதால் அதற்கு தனி மகத்துவம் இருப்பதாகவும் கருதப்படுகிறது.

இந்த பன்னீர் இலை விபூதி பிரசாதம் தினமும் காலை விஸ்வரூப தரிசனத்தின் போது சுவாமி பாதத்தில் வைத்து பூஜித்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருக பெருமானின் வேல் போன்று காட்சி அளிக்கும். 

திருச்செந்தூரில் சூரபத்மனை வென்று, கடற்கரையில் ஒளி வீசி நின்றான் முருகன். அவனது பெருமையைத் துதித்த வேதங்களனைத்தும் ஒன்று சேர்ந்து செந்திலோனின் மகிமையை விளக்கும் பன்னீர் மரங்களாக இவ்விடத்தில் தோன்றின.

எனவே வேதங்கள் அனைத்தும் பன்னீர் மரங்களாக நின்றதினால், இவற்றின் இலைகளுக்கும் வேத மந்திரசக்தி உண்டு என்கிறது புராணம். பன்னீர் இலையில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் நிறைந்து விடுகின்றது. நாமும், திருச்செந்தூர் முருகனை தரிசித்து, மனதுள் சரவண பவ மந்திரம் சொல்லி திருச்செந்தூரில் ஜெயந்திநாதராக அருள்பாலிக்கும் முருகனின் அருளைப் பெறுவோம்.