தீயிட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி

 

தீயிட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் – முதல்வர் பழனிசாமி

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 15 வயதான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வீட்டினுள் இருந்து புகை வந்துள்ளது.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் 15 வயதான ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த போது அவரின் வீட்டினுள் இருந்து புகை வந்துள்ளது.  இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உள்ளே சென்று பார்த்த போது, அந்த சிறுமி எரிந்து கொண்டிருந்தார். அந்த சிறுமியை உடனடியாக மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் அங்கு அவருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில் ஜெயஸ்ரீ குடும்பத்திற்கும் அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவருக்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், இருவரும் ஜெயஸ்ரீ வீட்டில் தனியாக இருந்த ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய தெரியவந்தது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் இருவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.  இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமி ஜெயஸ்ரீ

இந்நிலையில் சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்து முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில். “விழுப்புரம் மாணவி கொல்லப்பட்ட சம்பவம் “நெஞ்சை பதறவைக்கிறது”. இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். விழுப்புரத்தில் தீயிட்டுக் கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூபாய். 5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும். தீ காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமி உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.