தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் !

 

தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் !

சாமானிய மக்கள் பிழைப்பு நடத்தும் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.  இதனால் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர்.  சாமானிய மக்கள் பிழைப்பு நடத்தும் பல்வேறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.  இதனால் பல்வேறு தரப்பு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 

 

இந்நிலையில் தமிழகத்தில் தீப்பெட்டி தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு ரூ. 1000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இ.எஸ்.ஐ கீழ் பதிவு பெற்ற சுமார் 21,770 தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் அறிவித்துள்ள நிலையில்  இதற்காக  ரூ. 2,177 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிவாரண தொகையானது  மே மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

முன்னதாக கோவில்பட்டி பகுதியில் தீப்பெட்டி தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சமூக இடைவெளி பின்பற்றபட்டு எந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள், தீக்குச்சி தொழிற்சாலைகள் மருந்து முக்கிய குச்சிகளை பெட்டிக்குள் அடைக்கும் நிறுவனங்கள் போன்றவை நேற்று முன்தினம் முதல்  செயல்பட தொடங்கியுள்ளன