தீபிகா படுகோனுக்கு அடிமேல் அடி… விளம்பரங்களிலும் வாய்ப்பு பறிபோகிறது

 

தீபிகா படுகோனுக்கு அடிமேல் அடி… விளம்பரங்களிலும் வாய்ப்பு பறிபோகிறது

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சபக் படத்திற்கு நல்ல வரவேற்பு இல்லை. அதைத் தொடர்ந்து அவரது விளம்பரங்களையும் நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் சபக் படத்திற்கு நல்ல வரவேற்பு இல்லை. அதைத் தொடர்ந்து அவரது விளம்பரங்களையும் நிறுத்த நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

chappak

பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தயாரித்து நடித்த படம் சபக். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையைத் தத்ரூபமாக நடித்துக் காட்டியதாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்த படத்துக்குப் பிறகு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கும் யோசனைகள் கூட முன்வைக்கப்பட்டது. இப்படி படம் பற்றிய பாசிட்டிவான பல தகவல்கள் வெளியானாலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த ஒரே காரணத்துக்காக எதிர்ப்பும் எழுந்துள்ளது.

jnu

படத்தைப் பார்க்க மாட்டோம் என்று பா.ஜ.க-வினர் வெளிப்படையாக மிரட்டினர். மேலும், படத்துக்கு ரசிகர்கள் அளிக்கும் புள்ளிகளில் படத்தைப் பார்க்காமலேயே குறைவான புள்ளிகள் அளித்து படம் பற்றிய தவறான தோற்றத்தை அவர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.

chappak

இதனால், அதிக வசூல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட சபக் படம் கோடிகளைத் திரட்டவே திண்டாடி வருகிறது என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தீபிகா படுகோனை வைத்து எடுக்கப்பட்ட விளம்பர படங்களும் வெளியிட முடியாமல் நிறுவனங்கள் உள்ளன. பா.ஜ.க தொண்டர்களின் எதிர்ப்பு தங்கள் நிறுவனத்தின் மீதும் வந்துவிடக் கூடாது என்று தீபிகாவை ஒதுக்க நிறுவனங்கள் முடிவு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல… மத்திய அரசின் விளம்பரங்களிலும் தீபிகா நடித்துள்ளார்.

deepika

தீபிகாவுக்கு பதில் புதிய நடிகைகளை வைத்து விளம்பரம் எடுக்க மத்திய அரசு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 
எதிர்ப்பு கருத்தே வரக்கூடாது அப்படி வந்தால் அவர்களை வாழ விடமாட்டோம் என்று செயல்படுவது நாட்டுக்கு நல்லது இல்லை என்று தீபிகாவுக்கு ஆதரவான குரல் அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்கத் தொடங்கியுள்ளது.