தீபாவளி ஸ்பெஷல்: சுவையான பிஸ்தா பர்ஃபி செய்யலாம் வாங்க!

 

தீபாவளி ஸ்பெஷல்: சுவையான பிஸ்தா பர்ஃபி செய்யலாம் வாங்க!

தீபாவளிக்கு பட்டாசு,  அலங்காரம், புதிய உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

தீபாவளிக்கு பட்டாசு,  அலங்காரம், புதிய உடைகள் மற்றும் ஆபரணங்கள் ஆகியவை  முக்கிய பங்கு வகிக்கின்றன. இதுபோன்ற பெரு விழாக்களைக் கொண்டாடும் போது ஸ்பெஷலான உணவுகளை மறக்க முடியுமா என்ன? இந்தியாவில் சுவையான இனிப்புகளின்றி எந்த ஒரு விழாவும் முழுமை அடைவதில்லை. எனவே இந்த தீபாவளியில்  பிஸ்தா பர்ஃபி செய்து உங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை ஏன் குஷிப்படுத்தக்கூடாது? சரி…. இதைச் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

பால் – 4லி 

சர்க்கரை – 1 1/4 கி 

பிஸ்தா – 250 கிராம்

பிஸ்தா கலர் – 2 சொட்டுக்கள்

செய்முறை:

பாலை அடிகனமான பாத்திரம் அல்லது வாணலியில் ஊற்றி சுண்டக் காய்ச்சவும்.

கோவா பதத்திற்கு பால் சுண்டியதும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.

பிஸ்தா பருப்பை பொடியாகத் துருவவும்.

துருவிய பிஸ்தா, எசன்ஸ் இரண்டையும்  பாலுடன்  சேர்த்துக் நன்றாகக் கிளறவும். பின்பு  அந்தக் கலவையை  ஒரு தட்டில் கொட்டி பரப்பவும்.

ஆறியவுடன் வேண்டிய வடிவத்தில் துண்டுகள் போட்டால் சுவையான பிஸ்தா பர்ஃபி ரெடி.