தீபாவளி ஸ்பெஷல்: கமகமக்கும் கீரை விதை பாதாம் லட்டு!

 

தீபாவளி ஸ்பெஷல்: கமகமக்கும் கீரை விதை பாதாம் லட்டு!

இனிப்பு வகைகள் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.அதிலும் குறிப்பாக லட்டு என்றால் எல்லாருக்கும் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். பண்டிகை நாட்களிலோ, விசேஷங்களுக்கோ கடைகளில் தான் பெரும்பாலும் லட்டு வாங்குவோம்.

இனிப்பு வகைகள் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது.அதிலும் குறிப்பாக லட்டு என்றால் எல்லாருக்கும் கொள்ளை பிரியம் என்றே சொல்லலாம். பண்டிகை நாட்களிலோ, விசேஷங்களுக்கோ கடைகளில் தான் பெரும்பாலும் லட்டு வாங்குவோம். ஏனென்றால் லட்டு செய்வதற்கு அதிகப்படியான நேரம், பொருட்கள் மற்றும் பொறுமை தேவைப்படுகிறது. ஆனால் கீரை விதை பாதாம் லட்டை பொறுத்தவரையில்  சொடுக்கு போடும் நேரத்தில் செய்து முடித்துவிடலாம். அதை எப்படிச் செய்வது என்பதை இந்தக் குறிப்பில் பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள்:

தண்டுக்கீரையின் விதை – 50 கிராம் (தோல் நீக்கியது)
வெல்லம் 200கிராம் 
பாதாம் – 30 கிராம்
தண்ணீர் – தேவைக்கேற்ப 

செய்முறை :

முதலில் வெல்லத்தைத் தட்டி பொடியாக்கவும். பொடியாக்கிய வெல்லத்தை ஒரு கப் எடுத்து சிறிதளவு தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்துக் காய்ச்சவும். வெல்லம் தண்ணீரில் முழுமையாகக் கரைந்த பின் வடிகட்டியால் வெல்லக் கரைசலை வடிகட்டவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் தோல் நீக்கிய கீரை விதைகள், காய்ச்சிய வெல்லம் மற்றும் பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

வெல்லப்பாகு இவற்றுடன் நன்றாகச்  சேர்ந்ததும், அடுப்பிலிருந்து இறக்கி மிதமான சூட்டில்  சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும். இது லட்டு பதத்தில்  இறுகியவுடன் பரிமாறலாம்.