தீபாவளியன்று விதி மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை…!

 

தீபாவளியன்று விதி மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு 6 மாத சிறை தண்டனை…!

 தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு நேரக் கட்டுப்பாட்டை விதித்தது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.  தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு நேரக் கட்டுப்பாட்டை விதித்தது. அதனை தொடர்ந்து, மருத்துவ மனைகள், வழிபாட்டுத் தளங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களிலும் குடிசை மற்றும் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பகுதிகளிலும் பட்டாசு வெடிக்கக் கூடாது போன்ற பட்டாசு வெடிப்பதற்கான கட்டுப்பாடுகளையும் விதித்தது. 

Diwali

இந்நிலையில், அரசின் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்ததால் மதுரையைச் சேர்ந்த 62 பேர் மீது அம்மாவட்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, சென்னையிலும் 179 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக, விதிமுறையை மீறி பட்டாசு வெடித்ததாகத் தமிழகத்தில் 500 பேர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.

சிறைத் தண்டனை

மேலும், வழக்குப் பதிவு செய்யப்பட்டவர்களின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை அல்லது ரூ.1000 அபராதம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.