தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உள்ளது: அமைச்சர் கருப்பணன் தகவல்..

 

தீபாவளியன்று பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு உள்ளது: அமைச்சர் கருப்பணன் தகவல்..

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 27 ஆம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதால் பட்டாசு ஆலைகளும், ஆடை உற்பத்தி ஆலைகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன.

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் 27 ஆம் தேதி கோலாகலமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளதால் பட்டாசு ஆலைகளும், ஆடை உற்பத்தி ஆலைகளும் மும்முரமாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகளும் வெளிவந்துள்ளதால் மக்கள் ஆரவாரமாக பட்டாசுகள் வாங்க ஆரம்பித்துள்ளனர்.

Minister Karuppanan

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில், காற்று மாசுபாடு குறித்த கருத்தரங்கில் இன்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதைப் போல, இந்த ஆண்டும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும் விரைவில் அதற்கான அறிக்கை வெளி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.  

Diwali

மேலும், தீபாவளிக்காக இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் வந்திருப்பதால், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கப் பட்டுள்ள பட்டாசுகள் மட்டுமே தீபாவளியன்று வெடிக்க அனுமதி தரப்படும் என்றும் கூறியுள்ளார்.