தீபாவளிக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்! தமிழக அரசு நடவடிக்கை!

தீபாவளிக்கு 10,940 சிறப்பு பேருந்துகள்! தமிழக அரசு நடவடிக்கை!

தீபாவளிக்கான ரயில் முன்பதிவு, துவங்கிய சில நொடிகளிலேயே தீர்ந்து விட்ட நிலையில், தீபாவளி விடுமுறைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் பேருந்துகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. தீபாவளிக்கான பேருந்து முன்பதிவும் கடந்த மாதமே முடிந்து போனது. இந்நிலையில், ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக்கு போக்குவரத்துத் துறையின் சார்பில் மேற்கொள்ளவிருக்கும் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கூட்டம் நிறைவுற்றதும் செய்தியாளர்களிடம் பேசினார்.

mr vijayabaskar

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து 10,940 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு 8,310 பேருந்துகளும் இம்மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இதேபோல், ஆயுத பூஜையை முன்னிட்டு முதன்முறையாக  6,145 சிறப்பு பேருந்துகள் இம்மாதம் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை இயக்கப்படும் என்று தெரிவித்தார்.  பொதுமக்கள், சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்ய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 மையங்களும், தாம்பரம் சானிடோரியத்தில் 2 மையங்களும், பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் 1 மையமும், மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் 1 மையமும் என மொத்தம் 30 மையங்கள் திறக்கப்படுகின்றன. 
பண்டிகை விடுமுறை நாட்களுக்காக வெளியூர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு சிறப்பு முன்பதிவு மையங்கள் 23ம் தேதி முதல் 26ம் தேதி வரையும், பிற மையங்கள் 3ம் தேதி முதலும் செயல்படும் என்று தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tnstc.com, www.redbus.in, www.paytm.com, www.busindia.com போன்ற பிரபல இணையதளங்கள் மூலமாகவும் அரசு பேருந்துகளில் முன்பதிவு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.