தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆன்லைன் விளம்பரங்களுக்கு இரையாகும் குழந்தைகள் – ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆன்லைன் விளம்பரங்களுக்கு இரையாகும் குழந்தைகள் – ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆன்லைன் விளம்பரங்களுக்கு குழந்தைகள் இரையாவதாக ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: தீங்கு விளைவிக்கும் பொருட்களின் ஆன்லைன் விளம்பரங்களுக்கு குழந்தைகள் இரையாவதாக ஐ.நா ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

துரித உணவு முதல் புகையிலை மற்றும் ஆல்கஹால் வரை தீங்கு விளைவிக்கும் பொருட்களின் சமூக வலைதள விளம்பரங்களுக்கு குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இரையாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்னணு விளையாட்டுகள் தொடர்பான விளம்பரங்களும் இளம்பருவத்தினரை ஈர்த்து அவர்களை பாழ்படுத்துவதாக ஐ.நா அறிக்கையின் முதன்மை ஆசிரியர் கூறியுள்ளார்.

ttn

சில நாடுகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர் ஓராண்டுக்கு சுமார் 30 ஆயிரம் டிவி விளம்பரங்கள் வரை பார்ப்பதாக தெரியவந்துள்ளது. அதில் இ-சிகரெட் தொடர்பான விளம்பரங்களும் அடங்கும் என்பது அதிர்ச்சி அளிக்கும் தகவலாக உள்ளது. பிரேசில், சீனா, இந்தியா, நைஜீரியா போன்ற நாடுகளில் உள்ள ஆறு வயது குழந்தைகளில் சிலருக்கு குறைந்தது ஒரு சிகரெட் பெயராவது தெரிந்திருப்பதாக இந்த ஆய்வில் அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. மேலும் துரித உணவுகள் உள்ளிட்ட ஆரோக்கியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் தின்பண்டங்கள் தொடர்பான விளம்பரங்களும் குழந்தைகளை ஈர்த்து அவர்களது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காரணியாக திகழ்கின்றன.