தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி !

 

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி !

பேராசிரியர் அன்பழகன் அவர்களின் வயது 98. வயது முதிர்வின் காரணமாக இவர் ஒரு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் வயது 98. வயது முதிர்வின் காரணமாக இவர் ஒரு வருடத்திற்கு மேலாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதன் காரணமாக அவர் கட்சி பணிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. 

ttn

அதனால் அவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதனை அறிந்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும்  அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் உடனே மருத்துவமனைக்கு விரைந்து அவரது உடல்நலன்  குறித்து விசாரித்தனர். மேலும், அவருக்கு அளிக்கப் பட்டு வரும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தனர். தற்போது அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.