தி.மு.க கூட்டணி முன் குப்புறப்படுத்த பொன்னார்: வைரல் புகைப்படம்!?

 

தி.மு.க கூட்டணி முன் குப்புறப்படுத்த பொன்னார்:  வைரல் புகைப்படம்!?

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. 

கன்னியாக்குமரி : கன்னியாக்குமரி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார் 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், காலியாக இருந்த  22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ளது. 

ponar

இந்நிலையில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச்.வசந்தகுமார், பாஜ சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன், அமமுக சார்பில் லட்சுமணன் உட்பட 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.  இதில் எச்.வசந்தகுமார் முன்னிலையில் உள்ளார். வசந்த குமார் 38, 130 வாக்குகளும் பொன்.ராதாகிருஷ்ணன் 14,487 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் வசந்தகுமாரை  விட 23,643 வாக்குகள் வித்தியாசத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் பின்னடைவை சந்தித்துள்ளார்.  நாம் தமிழர் கட்சி 645 வாக்குகளும் அமமுக 430 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் 269 வாக்குகளும் பெற்றுள்ளது

vasanthakumar

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பொன்.ராதாகிருஷ்ணனை விட சொற்ப ஓட்டுகள் வித்தியாசத்திலேயே வசந்தகுமார் தோல்வி அடைந்திருந்த நிலையில் தற்போது அதை ஈடுகட்டும்  விதமாக வசந்தகுமார் முன்னிலை வகித்து வருகிறார்.

இதனிடையே பொன்.ராதா கிருஷ்ணன் தோல்வி முகத்தை தழுவி உள்ளதால் பொன்.ராதா கிருஷ்ணன் குப்புறப்படுத்துத் தூங்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.