தி.மு.க கூட்டணியின் தொகுதி பட்டியல்: சென்னையை டார்கெட் செய்துள்ள மு.க.ஸ்டாலின்: போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்!

 

தி.மு.க கூட்டணியின் தொகுதி பட்டியல்:  சென்னையை டார்கெட் செய்துள்ள மு.க.ஸ்டாலின்: போட்டியிடும் தொகுதிகள் முழு விவரம்!

மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை: மக்களவை தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.

 

மக்களவை தேர்தல்

மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பணியில் அரசியல் கட்சிகள் வேகம் காட்டி வருகிறது. வேட்பாளர்கள் தேர்வு, தொகுதிகள் பிரிப்பது மற்றும் வெற்றி பெறுதற்கான திட்டம் வகுப்பது என அத்தனை கட்சிகளும் முனைப்பு காட்டி வருகின்றது. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் கூட்டணியில், கட்சிகளுக்கு இடையிலான தொகுதி ஒதுக்கீடும் நிறைவடைந்தது.

இதையடுத்து திமுக தலைமையில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயலத்தில் உள்ள கலைஞர் அரங்கில் வெளியிட்டார்.அவருடன் கூட்டணி கட்சி தலைவர்களும், திமுக நிர்வாகிகளும் உடனிருந்தனர். 

திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதி பட்டியல் பின்வருமாறு:-

திமுக போட்டியிடும் தொகுதிகள்:
  • வடசென்னை
  • மத்திய சென்னை
  • தென் சென்னை 
  • ஸ்ரீபெரும்புதூர்
  • காஞ்சிபுரம்
  • அரக்கோணம்
  • சேலம்
  • நீலகிரி
  • திருவண்ணாமலை
  • திண்டுக்கல்
  • பொள்ளாச்சி 
  • கடலூர்
  • மயிலாடுதுறை
  • தஞ்சை 
  • தூத்துக்குடி 
  • திண்டுக்கல் 
  • தென்காசி
  • நெல்லை 
  • கள்ளக்குறிச்சி
  • தருமபுரி 
 
காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்
  • கரூர் 
  • ஆரணி
  • கன்னியாகுமரி 
  • கிருஷ்ணகிரி 
  • சிவகங்கை 
  • திருவள்ளூர்
  • விருதுநகர் 
  • தேனி 
  • புதுச்சேரி
  • திருச்சி 
மதிமுக 
  • ஈரோடு 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டி
  • கோவை
  • மதுரை
இந்திய கம்யூனிஸ்ட் போட்டி
  • திருப்பூர்
  • நாகை
விசிக 
  • விழுப்புரம்
  • சிதம்பரம்
கொ.ம.க.தே கட்சி
  • நாமக்கல்
ஐ.ஜே.கே 
  • பெரம்பலூர் தொகுதி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 
  • இராமநாதபுரம்