தி.மு.க-கம்யூனிஸ்ட் ரெண்டு பேரும் ஓட்டு கேட்டு வீட்டுக் கேட்டை ஆட்ட வேண்டாம் ! திக் திக் திருப்பூர்

 

தி.மு.க-கம்யூனிஸ்ட் ரெண்டு பேரும் ஓட்டு கேட்டு வீட்டுக் கேட்டை ஆட்ட வேண்டாம் ! திக் திக் திருப்பூர்

சபரிமலை விவகாரத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க., – கம்யூ., கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர்:  சபரிமலை விவகாரத்தைக் கருத்தில் கொண்டு தி.மு.க., – கம்யூ., கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம் என்று இந்து மக்கள் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

sabarimala

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு ஒருசேர ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருகிறது.அதே சமயம் பிந்து, கனகதுர்கா என்ற 50 வயதுக்கும் குறைவான இரண்டு பெண்கள் போலீஸ் பாதுகாப்போடு சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்ததால் கூடுதல் எதிர்ப்பு கிளம்பியது.

sabari

மக்களவை தேர்தல் நெருங்கும்  நிலையில் சபரிமலை விவகாரத்தைச் சிலர் ஆயுதமாகப் பயன்படுத்த நேரிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.  இது தொடர்பாக மாநில தேர்தல் அதிகாரி தீகா ராம் மீனா, “உச்ச நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வுகளைத் தூண்டிவிடுவது அல்லது மதத்தின் பெயரால் ஓட்டு சேகரிப்பது போன்றவை தேர்தல் நடத்தை விதிமீறல் ஆகும். குறிப்பாகச் சபரிமலை கோவிலின்  பெயரால் மத பிரசாரம் மேற்கொள்வது தெளிவான விதிமீறல் ஆகும். எனவே இத்தகைய விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அதிரடியாக அறிவித்தார்.

tamil

இந்நிலையில் திருப்பூர் வளையங்காடு பகுதிகளிலுள்ள இந்துக்களின் வீடுகளில் இந்து மக்கள் கட்சியினரால்  ‘தி.மு.க., – கம்யூ., கட்சிகள் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ என நோட்டீஸ் அச்சடித்து ஒட்டப்பட்டுள்ளது. மேலும் இந்து தெய்வங்களை, கலாச்சாரத்தைக் கொச்சைப்படுத்தியவர்கள் உடன் கூட்டணி வைத்தவர்கள் எங்களிடம் ஓட்டு கேட்டு வர வேண்டாம்’ எனும் வாசகம் அடங்கிய நோட்டீஸையும்   வீடு, வீடாக ஒட்டியுள்ளனர். மக்கள் விருப்புகிறார்களோ இல்லையோ ஆனாலும் இந்த போஸ்டர்கள் திண்டுக்கல், திருப்பூர் போன்ற தென் மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த  போஸ்டர்களால் தி.மு.க., – கம்யூ., கட்சிகள்  அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 

sabrimala

முன்னதாக சபரிமலை விவகாரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது. பாஜகவினர் இந்துக்களின் மனதை கம்யூனிஸ்டு கட்சி புண்படுத்துவதாகவும், திட்டமிட்டே சபரிமலைக்குள் பெண்களை அனுப்பியுள்ளனர் என்றும்  போராட்டம் நடத்தினர்.  இப்படி சபரிமலை பிரச்னையை முன்வைத்து ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன. ஒருமுறை பாஜக கூட்டத்தில் கூட அம்மாநில தலைவர் சபரிமலை விவகாரம் நமக்கு கிடைத்த தங்கமான வாய்ப்பு என்று பேசியது சர்ச்சைக்குள்ளானது. 

ec

அந்த வகையில், சபரிமலை விவகாரத்தை தேர்தலில் நுழைக்க முயற்சித்து, அதற்கான முயற்சியிலும் இறங்கியுள்ளனர் பாஜகவினர். அதனால் தான் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மதத்தை வைத்தோ, சபரிமலை விவகாரத்தை வைத்தோ ஒட்டுக்கேட்கக் கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், இந்து அமைப்புகள் சில இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதைத் தேர்தல் ஆணையம் கண்டிக்குமா? அல்லது பாரபட்சம் காட்டுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். 

இதையும் வாசிக்க: அனல் பறக்கும் பரப்புரை களம்: விவாதத்திற்கு அழைத்த அன்புமணி: சவாலை ஏற்ற உதயநிதி