‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ சர்ச்சை; அனுபம் கேர் மீது வழக்குப்பதிவு

 

‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ சர்ச்சை; அனுபம் கேர் மீது வழக்குப்பதிவு

‘தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து நடிகர் அனுபம் கேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மும்பை: தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ படத்தின் சர்ச்சையை தொடர்ந்து நடிகர் அனுபம் கேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய `தி ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் தத் இயக்கியுள்ளார். இப்படத்துக்கு ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார்.

மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், அவரது நிர்வாகத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்ததை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில், அணு சக்தி ஒப்பந்தம், காஷ்மீர் பிரச்னை, மன்மோகன் சிங் மீன்ஸ் பிசினஸ் போன்ற அம்சஙகள் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, காங்கிரஸ் தரப்பில் படத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், பீகார் நீதிமன்றத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடித்துள்ள அனுபம் கேர் மீது வழக்கறிஞர் சுதிர்குமார் ஒஜா வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பவர்களை உயர் பதிவிகளில் இருந்தவர்களுக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு வரும் ஜன.8ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜன.11ம் தேதி ரிலீசாகவுள்ள இப்படத்திற்கு எதிராக தமிழக காங்கிரஸ் கட்சி போர்க் கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.