திறந்தவெளியில் மலம் கழித்தால் குடும்ப அட்டை ரத்து! அதை போட்டோ எடுத்தால் வரிச்சலுகை!

 

திறந்தவெளியில் மலம் கழித்தால் குடும்ப அட்டை ரத்து! அதை போட்டோ எடுத்தால் வரிச்சலுகை!

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  கிராமப்புறங்களில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்  கிராமப்புறங்களில் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதை அனைவரும் பயன்படுத்துகிறார்களா என்றால் அது கேள்வி குறியே. இதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் சிலர் அதிரடி முடிவெடுத்துள்ளனர். 

ttn

மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜரண்டி என்ற கிராமம் ஒன்று உள்ளது. இங்கு சுமார்  5,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  இங்கு திறந்தவெளியில் கிராம மக்கள் மலம் கழித்தால்   குடும்ப அட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளியில் மலம் கழிப்பதைப் புகைப்படம் எடுத்து அனுப்பினால்  வரிச்சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

ttn

இதுகுறித்து கூறியுள்ள கிராமப் பஞ்சாயத்துத் தலைவர், ‘ எங்கள் கிராமத்தில் தண்ணீர் வசதியுடன் கழிப்பறைகள் உள்ளது. ஆனால்  மக்கள் அதை பயன்படுத்தாமல், திறந்தவெளியில் மலம் கழிக்கிறார்கள். இது தூய்மைக்கும் சுகாதாரத்திற்கும் கேடு. இதனால் நோய்கள் பரவுகிறது. அதை தடுக்கவே  இவ்வாறு முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதை மாவட்ட நிர்வாகமும் வரவேற்றுள்ளது’ என்று கூறியுள்ளார்.