திறக்காத கோக்குக்குள்ளே பிரிக்காத பிளாஸ்டிக் – 1 லட்சம் அபராதம்

 

திறக்காத கோக்குக்குள்ளே பிரிக்காத பிளாஸ்டிக் – 1 லட்சம் அபராதம்

1 லட்சம் ரூபாய்க்கு ஆதரவற்ற 100 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சத்துள்ள பழங்களையும், உணவு பொருட்களையும் வாங்கிக் கொடுக்க கொகோ கோலா நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த பூர்ணிமா, மளிகை கடையில் 12 ரூபாய்க்கு கோகோ கோலா பட்டில் ஒன்றை வாங்கியுள்ளார்.  பாட்டிலை திறப்பதற்கு முன்பாக எதேச்சையாக பாட்டிலுக்குள் பார்த்தால், திறக்காத கோக் பாட்டில் உள்ளே பாலித்தின் பேப்பர் கிடந்துள்ளது. பேக்கிங் மற்றும் தயாரிப்பு குறைபாடுடன் கூடிய பொருளை தயாரித்து விற்பனைக்கு அனுப்பிய கோகோ கோலா நிறுவனம் மற்றும் அதனை விற்ற மளிகை கடைக்காரர் மீது நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 

Coca Cola

கடந்த 5 வருடங்களாக நடந்த வழக்கு விசாரணையின் இறுதியில், கோகோ கோலா நிறுவனத்திற்கு 75 ஆயிரம் ரூபாயும், கடைக்காரருக்கு 25 ஆயிரம் ரூபாயும் என மொத்தம் 1 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த 1 லட்சம் ரூபாய்க்கு ஆதரவற்ற 100 குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சத்துள்ள பழங்களையும், உணவு பொருட்களையும் வாங்கிக் கொடுக்க கொகோ கோலா நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகப்பெரிய நிறுவனத்த எதிர்த்து துணிச்சலுடன் 5 வருடமாக வழக்கை நடத்திய பூர்ணிமாவிற்கு வழக்கு செலவிற்காக 3 ஆயிரம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது.