‘திரை கலைஞர்’ கருணாநிதி..!  வசனங்களால் தெறிவிக்கவிட்ட மந்திர மனிதர்! 

 

‘திரை கலைஞர்’ கருணாநிதி..!  வசனங்களால் தெறிவிக்கவிட்ட மந்திர மனிதர்! 

கருணாநிதி எழுதிய தூக்குமேடை என்ற நாடகத்தை பார்த்து நடிகர் எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கினார். 

‘திரை கலைஞர்’ கருணாநிதி..!  வசனங்களால் தெறிவிக்கவிட்ட மந்திர மனிதர்! 

கருணாநிதி எழுதிய தூக்குமேடை என்ற நாடகத்தை பார்த்து நடிகர் எம்.ஆர்.ராதா ‘கலைஞர்’ என்ற அடைமொழியை வழங்கினார். 

அரசியலில் மட்டுமல்லாமல், கலைத் துறையிலும் கருணாநிதியின் பங்கு அளப்பரியது. 1947ல் வெளியான ராஜகுமாரியில் துவங்கி 2011ல் வெளியான பொன்னர் – சங்கர் வரை 64 வருடங்கள் சினிமாத் துறையில் செயல்பட்டிருக்கிறார் கருணாநிதி. 

நாடகங்களாலும், சமூக நீதி கருத்து அடுக்கு மொழிகளாலும், வசனங்களாலும் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார் கருணாநிதி.  1947-ல் ‘ராஜகுமாரி’யில் தொடங்கியது கலைஞரின் திரை வாழ்க்கை. முதன் முதலில் அவர் எழுதிய வேலைக்காரி திரைப்படம் 1949 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்றது. கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு’, ‘சட்டம் ஒரு இருட்டறை, ஒன்றே குலம் ஒருவனே தேவன் என பல வசனங்கள் அவரை திரைப்பயண வாழ்வில் ஒளிவீச ஆரம்பித்தது.’மருதநாட்டு இளவரசி’ கலைஞரின் புகழை, அவரின் கதை வசனத்தை உச்சியில் கொண்டுபோய் நிறுத்தியது. அதற்கு அடுத்தப்படியான பெருமையை ‘மந்திரி குமாரி’ பெற்றது. 

இவையனைத்துக்கு மேலாக புகழும், பெருமை பெற்றது பராசக்தி. 1952 ஆம் ஆண்டு வெளிவந்த பராசக்தி படத்தில் ‘இனி எங்கள் ஆட்சிதான்.. எங்கள் பேச்சுதான்’’ என சூளுரைத்து சொல்லும் வண்ணம் வசனம் எழுதி, பட்டிதொட்டியெல்லாம் திராவிட வேர் பரவ உறுதுணையாய் நின்றார். புரட்சி கருத்துக்களை தன் பேனாவில் கொண்டு வார்த்தெடுத்தார். இதேபோல் ‘மனோகரா’ அப்படிப்பட்ட ஒரு படம்தான். “பொறுத்தது போதும்.. பொங்கி எழு!” என கண்ணாம்பாள் சிவாஜியை பார்த்து சொல்லும் அந்த வசனமும், அதை தொடர்ந்து நடக்கும் காட்சிகளும் காண்போரை உணர்ச்சியடைவைக்கிறது. 

அடுத்து பூம்புகார் படத்திற்கு வசனம் எழுதினார் கருணாநிதி. நீதியின் இலக்கணம் உரைக்கும் நெடுஞ்செழிய பாண்டியனே!! உனது நாட்டில் எதற்குப்பெயர் நீதி? நல்லார் வகுத்ததா நீதி? அல்ல அல்ல வல்லான் வகுத்ததே இங்கு நீதி” என்ற வசனம் கண்ணகியை கண்முன்னே நிறுத்தியது. 

இதேபோன்று ராஜா ராணி படத்தில், வீரம் விலை போகாது விவேகம் துணையிராவிட்டால்  என பேசியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் ‘மந்திரி குமாரி’ படத்தில் எம்ஜிஆர் கொலைக்களத்தில் நின்று கொண்டிருக்கும்போது பேசும் ஒரு வசனத்தை இன்றைய என் ஆசையாக கொண்டு எழுதுகிறேன். “நீ கடைசியாக சொல்ல நினைப்பது?…  “கடைசியாகவா? யாரிடத்தில் சொல்வது? என் உயிரை குடிக்க துடித்துக்கொண்டிருக்கும் சாவிடத்தில் சொல்வதா? என் கழுத்தை நெருக்க காத்திருக்கும் இந்தக் கத்தியிடத்தில் சொல்வதா? அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைக் கண்டு ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா? யாரிடத்தில் சொன்னாலும் சரி.. யார் கேட்டாலும் சரி..என் இதயத் துடிப்புகள் கடைசி நேரத்திலாவது ஆவேசமாக துடித்து ஓயட்டும். என் கண்களிலே ஒருமுறை கனல் வீசி பின்பு அணைந்து போகட்டும். என் ரத்த ஓட்டம் சூடேறி பின்னர் சில்லிட்டு போகட்டும்…”என வரும் வசனம் மிகவும் நேர்த்தியாகவும், கருணாநிதியின் தமிழ் புலமையையும் காட்டுகிறது.