திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டால் நடவடிக்கை! – உயர்நீதிமன்றம் அதிரடி

 

திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டால் நடவடிக்கை! – உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் புதுப்படங்கள் வெளியாவதும், அதற்கான கூடுதல் காட்சிகளை திரையரங்குகள் திரையிடுவதும் வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், அனுமதி இல்லாமல் திரையரங்குகளில் கூடுதல் காட்சிகள் திரையிட்டு வரிஏய்ப்பு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகளை திரையிட்டால் ஆட்சியர்கள் விளக்கம் கேட்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரம், பண்டிகை மற்றும் வார இறுதி நாட்களில் ஆட்சியர் அனுமதியுடன் கூடுதல் காட்சி திரையிடலாம் என்றும் உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.