திருவாரூர் இடைத்தேர்தல்…. அதிமுகவினருக்கு அழைப்பு

 

திருவாரூர் இடைத்தேர்தல்…. அதிமுகவினருக்கு அழைப்பு

சென்னை: திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திருவாரூர் தொகுதி காலியாக இருந்தது. இதனால் திருவாரூருக்கு எப்போது தேர்தல் நடக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனைதொடர்ந்து அந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனவும்,10-ம் தேதிக்குள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் கட்சி தலைமை அலுவலகத்தில் நாளை விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திருவாரூர் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிற தொண்டர்கள் 2-ம் தேதி (நாளை) காலை 9.30 மணி முதல் 3-ம் தேதி வரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விண்ணப்ப தொகையான ரூ.25 ஆயிரம் செலுத்தி, விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை 4-ம் தேதி நடைபெறும் என கூறியுள்ளனர்.