திருவாரூரில் புயல் நிவாரண ஆய்வு நடத்தக்கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

 

திருவாரூரில் புயல் நிவாரண ஆய்வு நடத்தக்கூடாது: தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி

திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு அமைச்சர் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்தக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

சென்னை: திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பதால் அங்கு அமைச்சர் கஜா புயல் நிவாரண ஆய்வு நடத்தக்கூடாது என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் நடத்தைகளை அமல்படுத்தி தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.

புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும் என்றார்.