திருவாதிரை,ஸ்வாதி,சதயம், அஸ்வினி,மகம்,மூலம், நட்சத்திரகாரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள்.

 

திருவாதிரை,ஸ்வாதி,சதயம், அஸ்வினி,மகம்,மூலம், நட்சத்திரகாரர்கள் வழிபாடு செய்ய வேண்டிய கோயில்கள்.

ராகு கேதுவால் ஏற்படும் கால சர்ப்ப தோஷமும் அதற்குரிய பரிகாரங்களும் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்போம்.

ராகு மற்றும் கேது என்று அழைக்கப்படும் நிழல் கிரகங்கள் 12 ராசிகளில் மேஷத்தில் அதிக சீற்றத்தையும், ரிஷபத்தில் அதிக ஆசையையும், மிதுனத்தில் அதிக காதலையும், கடகத்தில் குடும்பப் பிரிவையும், சிம்மத்தில் அதிக ஆணவத்தையும், கன்னியில் சுயநல புத்தியையும், 

muruga

துலாத்தில் வியாபார மேன்மையையும், விருச்சிகத்தில் அதிக வேகத்தையும், தனுசில் அதிக ஆன்மிகத்தையும், மகரம், கும்பத்தில் விஷ வாக்கையும், மீனத்தில் அதிக பொருள் ஆசையையும் தரும்.என்று பல்வேறு ஜோதிட நூல்கள் கூறுகின்றது.

ராகு கேதுகள் எந்த நட்சத்திரத்தில் நிற்கிறார்களோ அந்த நட்சத்திரத்தின் அதிதேவதைக்கு அர்ச்சனை செய்வதால் ராகு மற்றும் கேது வினால் ஏற்படும் தீய பலன்களில் இருந்து நம்மை நாமே காத்து கொள்ளலாம்.நம் முன்னோர்கள் கூறியுள்ள ராகு மற்றும் கேது தோஷம் உள்ளவர்கள் வணங்க வேண்டிய பரிகார கோயில்களை பற்றி பார்போம்.

ராமேஸ்வரம் (பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதி) : 

ராமேஸ்வரம் சென்று கடலில் நீராடிவிட்டு கோயிலில் உள்ள 21 தீர்த்தங்களிலும் நீராடி வந்தாலே ராகு மற்றும் கேது தோஷம் நீங்கி விட்டதாக கருதுகிறார்கள். குறிப்பாக ராகு,கேது தோஷமுள்ளவர்கள் இங்குள்ள நடராஜர் சன்னதியில் இருந்து பதஞ்சலி முனிவரின் ஜீவசமாதியில் எரியும் விளக்கில் நெய்விட்டு வழிபட்டால் தோஷம் நீங்கி விடுவதாக நம் முன்னோர்களின் நம்பிக்கையாகும்.

pathanjali

இங்கு உள்ள நடராஜர் சன்னதியை சுற்றிலும் நாகப்பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும்.

பேரையூர் ஸ்ரீ நாகநாதர் : 

புதுக்கோட்டைக்கு அருகில் அமைந்துள்ளது பேரையூர் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் ஸ்ரீபிரகதாம்பாள் உடனுறை ஸ்ரீநாகநாதரை வணங்கு வதால் ராகு,கேது தோஷம் நீங்குவதாக நம்பப்படுகிறது. நாகலோகத்தில் இருந்த பாம்புகள் யாவும் இந்த ஈசனை வணங்கி அருள் பெற்றதாக தல வரலாறு கூறுகின்றது.முறைப்படி இங்கு சென்று வணங்கினால் திருமணத்தடை நீங்கும். 

periaur

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயில் :

தஞ்சைக்கு அருகில் உள்ள புன்னையநல்லூரில் வீற்றிருக்கும் ஸ்ரீ மாரியம்மனை வணங்குவதால் ராகு மற்றும் கேது தோஷம் நீங்கும். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இங்கு பிரம்மாண்டமாக எழும்பி இருந்த புற்று மண்ணைக் குழைத்து ஸ்ரீசக்கரம் எழுதி அதன் மீது பிரதிஷ்டை செய்த அம்மனே இப்போது காட்சி தருகிறாள்.

punnai

இந்த அம்மனை வணங்கினால் பில்லி, சூனியம், மாந்திரீகம், ஏவல் இவற்றால் ஏற்படும் அனைத்து உபாதைகளிலிருந்தும் விடுபடலாம். 

திருப்பாம்புரம் : 

கும்பகோணம் காரைக்கால் சாலையில் கொல்லு மாங்குடிக்கு மேற்கே கற்கத்தி என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் என்னும் திவ்ய திருத்தலம். ராகு, கேது தலங்களான ஸ்ரீ காளஹஸ்தி, திருநாகேஸ்வரம், கீழ்பெரும் பள்ளம் ஆகிய தலங்களின் பெருமையை ஒரு சேர அமைந்தது இத்தலம் ஆகும். 

ragu

ராகு-கேதுவுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ராகுவும், கேதுவும் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்து சாப விமோசனம் பெற்றனர் என்பது தல வரலாறு. காலசர்ப்ப தோஷம் ராகு-கேது தசை நடப்பில் உள்ளோர். களத்ரதோஷம், புத்ரதோஷம் உள்ளோர் இங்கு வந்து சாந்தி பரிகாரம் செய்து வருகின்றனர். 

திருச்செங்கோடு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் : 

ஆதிசேஷனுக்கும் வாயு பகவானுக்கும் உண்டான சர்ச்சையில் ஆதிசேஷன் மேரு மலையை அழுத்தி பிடித்துக் கொள்ள வாயு பகவான் தன் பலத்தால் மலையை விடுவிக்க வேண்டும் என்ற பந்தயம் ஏற்பட்டது. இதன் படி வாயு பகவான் வேகமாக வீச மலையின் முகட்டுப் பகுதிகள் பறந்து சென்று பூமியன் பல இடங்களில் விழுந்தது.

garuda

ஆதி சேஷன் உடலில் ஏற்பட்ட காயத்தால் ரத்தம் கொட்டி மலை செந்நிறமானதாக கூறுகின்றனர். இம்மலைக்கு நாக கிரி, வாயு மலை என்னும் பெயர் உண்டு. 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது.

நாக தோஷம், ராகு தோஷம், காலசர்ப தோஷம், களத்ர தோஷம் அவற்றால் பாதிக்கப்பட்வர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வதால் சகல விதமான தோஷங்களும் நீங்கும்.

காஞ்சீபுரம் சித்ரகுப்தன் : 

சித்ரகுப்தன் கேதுவுக்கு அதிதேவதையாக விளங்குகிறார். இவருக்கு காஞ்சீபுரத்தில் தனி ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் சென்று கொள்ளு 200 கிராம், உளுந்து 200 கிராம், சித்திரவண்ணத் துணி ஒன்றரை மீட்டர் வைத்து அர்ச்சனை செய்து துணியை ஆலயத்திலேயே அர்ப்பணித்துவிட்டு, உளுந்தையும், கொள்ளையும் பால்தரக்கூடிய பசுவுக்கு கொடுக்க வேண்டும். இந்தப் பரிகாரம் செய்வதால் ராகு-கேது தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். 

 

natarajar

காஞ்சீபுரம்-குமர கோட்டம் : 

காஞ்சீபுரத்தில் சங்கரமடத்தின் அருகில், ராஜவீதியில் குமரக் கோட்டம், சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்குதான் கந்தபுராணம் அரங்கேற்றப்பட்டது. இங்கு காணும் முருகனுக்கு 5 தலை நாகமும், வள்ளி, தெய்வானைக்கு 3 தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகனை கல்யாண சுந்தரர் என்று அழைக்கின்றனர். 

தமிழ்நாட்டில் இது போன்று நாகம் குடை பிடிக்கும் விக்ரகம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்த முருகனை நாகம் வழிபடுவதால், நாக சுப்பிரமணியம் என்று பெயர் பெறுகிறார். நாக சுப்பிரமணியரை வழிபட்டால் நாகதோஷம் நீங்கும் பரிகார தலமாகவும் இத்திருத்தலம் அமைந்துள்ளது.