திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது..!

 

திருவள்ளுவர் சிலைக்குக் காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது..!

திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணியைப் பூசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

திருவள்ளுவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று பல்வேறு சர்ச்சையான கருத்துக்கள் எழுந்து வருகின்றன. சில படங்களில் அவர் காவி நிற உடை அணிந்திருந்ததால் அவர் இந்து மதத்தையே சார்ந்தவர் என்ற பா.ஜ.க ட்விட்டரில் பகிர்ந்து வருகிறது. இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், திருவள்ளுவர் சிலை மீது மர்ம நபர்கள் சாணியைப் பூசிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Thiruvalluvar

இந்நிலையில், இன்று காலை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் தான் என்று சித்தரிக்க, திருச்சி பிள்ளையார் பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குப் பால் அபிஷேகம் செய்து, காவி துண்டு, ருத்திராட்ச மாலை அணிவித்து, திருநீறு பூசி கற்பூர தீப ஆராதனை காட்டினார்.

Sambath

வள்ளுவர் பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் தெரியாமல், இத்தகைய செயலை செய்ததால் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார். அதன் பின், கும்பகோணம் உடையாளூரில் உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அர்ஜுன் சம்பத் விசாரணைக்காகக் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.