திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா! 

 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா! 

வைகுண்ட ஏகாதசி விழாவினை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்.

சென்னை: 

மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும். அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

parthasarathy

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இத்தலத்தில் மூலவர் வேங்கடகிருஷ்ணனாகவும் உற்சவர் பார்த்தசாரதி பெருமாளாகவும் அருள் பாலிக்கின்றனர்.இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு உற்சவம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

parthasarathy

இந்த ஆண்டிற்கான வைகுண்ட ஏகாதசி, 18ஆம்  தேதி அன்று சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால், சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

வைகுண்ட ஏகாதசி தினத்தன்று எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட உள்ளதாகவும் மேலும் பாதுகாப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்த உள்ளதாகவும். 

கோயிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாகவும் கோயில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

parthasarathy

மேலும் மாநகராட்சி நிர்வாகம் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பேருந்துகள், சென்னை நகரின் பல பகுதிகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.

மாற்று திறனாளிகள் காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரையும் முதியோர் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரையும் உபயதாரர், கட்டளைதாரர்கள், காலை, 11:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரையும் தெற்கு மாட வீதியில் உள்ள வரிசையில் செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ் பாடி விரதமிருந்தால், மனக் கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும்.