திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

 

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரம்

108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வருகின்ற 18 ஆம் தேதி சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெறுகிறது . 

சென்னை : 

 திருவல்லிக்கேணி பார்த்தசாரதி  பெருமாள் கோயிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.

parththa

ஆழ்வார்களாகிய பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோயிலில் உள்ள பெருமாளை வழிப்பட்டு உள்ளனர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8 ஆம் தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. 

அதனை தொடர்ந்து வேணுகோபாலன், காளிங்கர்நர்த்தன, சக்கரவர்த்தித்திருமகன் உள்ளிட்ட பல்வேறு உற்சவர் திருக்கோலத்தில் மாடவீதிகளை வலம் வந்து அருள்பாலித்தார். 

வைகுண்ட ஏகாதசியான வருகின்ற 18ஆம்  தேதி அதிகாலை 2:30 மணி முதல் இரவு 11:00 மணி வரை மூலவர் தரிசனம் நடைபெறுகிறது .

parththa

அதனை தொடர்ந்து அதிகாலை, 4:30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும், அன்று இரவு 12:00 மணிக்கு பார்த்தசாரதி சுவாமி, நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடும் நடைபெறுகிறது 

அதன்பின் 27 ஆம் தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது . அதனையடுத்து 28ம் தேதி இயற்பா சாற்றுமறை நடைபெறுகிறது விழாவிற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகத்தினர் மிகவும் சிறப்பாக செய்து வருகின்றனர்.