திருவண்ணாமலையில் 24-ந்தேதி குபேரர் கிரிவலம்! குவியும் பக்தர்கள்!

கார்த்திகை மாதம் சிவராத்திரியன்று மாலை 6 மணி முதல் 7 மணி வரை குபேர லிங்கத்திற்கு குபேரர் வந்து சூட்சமாக பூஜை செய்வார் என்பது ஐதீகம். அந்த நேரத்தில் குபேரர் பூஜை செய்வதை காண்பவர்களின் வீடுகளில் செல்வம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் இம்மாதம் 24ம் தேதி குபேர பூஜையும், குபேரர் கிரிவலமும் நடைபெற உள்ளது.

girivalam

ஒவ்வொரு வருடமும் குபேரர், கிரிவலப் பாதையில் இருக்கும் குபேர லிங்கத்திற்கு பூஜைகள் செய்வதைப் பார்ப்பதற்கு லட்சக்கணக்கில் திரளான ப் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். அதே போல் இந்த வருடமும் ஏராளமான பக்தர்கள் தற்போதே திருவண்ணாமலையில் குவிந்து வருகிறார்கள். இன்னும் அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால், கிரிவலப் பாதையில் அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.