திருவண்ணாமலையில் வரும் 14 ஆம் தேதி முதல் கடைகள் திறக்க தடை!

 

திருவண்ணாமலையில் வரும் 14 ஆம் தேதி முதல் கடைகள் திறக்க தடை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீட்டிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. ரேப்பிட் டெஸ்ட் கிட் இன்னும் வரவே இல்லை. அது வந்து சோதனை செய்த பிறகே, அதன் பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெரியும். பரிசோதனைகளில் நாம் இத்தாலி, அமெரிக்காவைக் காட்டிலும் மிகவும் பின்தங்கி உள்ளோம் என்று மருத்துவர்கள் எச்சரித்து வருவதைக் காணும் போது அச்சம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை.

road

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 14ம் தேதி முதல் காய்கறி சந்தைகள், கடைகள், பேக்கரிகளில் நேரடி விற்பனைக்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்டரின் பெயரில் வீடுகளில் நேரடி விநியோகத்திற்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவிட்டுள்ளார்.