திரும்பப் பெறப்படும் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல் ஸ்கூட்டர்கள் – காரணம் உள்ளே!

 

திரும்பப் பெறப்படும் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல் ஸ்கூட்டர்கள் – காரணம் உள்ளே!

ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல்களை திரும்பப் பெற்று அதில் உள்ள சிறிய கோளாறை சரிசெய்து மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி: ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல்களை திரும்பப் பெற்று அதில் உள்ள சிறிய கோளாறை சரிசெய்து மீண்டும் வாடிக்கையாளர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ்.6 மாடல் ஸ்கூட்டரை திரும்பப் பெறுவதாக ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கூலிங் ஃபேன் கவர் மற்றும் ஆயில் காஜ் கோளாறு ஆகிய கோளாறுகளை சரிசெய்வதன் காரணமாக ஸ்கூட்டரை திரும்பப் பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த இரண்டு பாகங்களில் உள்ள கோளாறு பற்றி அதிக விவரங்களை ஹோண்டா நிறுவனம் தெரிவிக்கவில்லை.

ttn

ஆனால் இரு பாகங்களையும் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இலவசமாக ஹோண்டா நிறுவனம் மாற்றிக் கொடுக்கிறது. இந்த பாகங்களை மாற்றி சரிசெய்ய அதிகபட்சம் 30 நிமிடங்களே ஆகும் என்று கூறப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் ஆக்டிவா 125 பி.எஸ்.6 ஸ்கூட்டரை திரும்பக் கொடுக்க வேண்டுமா என்ற விவரங்களை ஹோண்டா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.